10035-அன்பு நிறை அன்னையே |
அன்பு நிறை அன்னையே - அருள் தரும் மாமரியே விண்ணின் தாரகையே - இந்த மண்ணின் அரசியே அன்னையே நாங்கள் - உம் குழந்தைகள் அல்லவா அடைக்கலம் தந்து - நீ எம்மையே காத்திடுவாய் அமைதியின் உறைவிடம் பெண்மை அல்லவா பெண்மையின் இலக்கணம் மரியே நீயல்லவா பெண்மையின் சிறப்பிடம் தாய்மை அல்லவா தாய்மையின் உயர்நிலை மரியே நீயல்லவா தாயே உந்தன் அன்பு வழியில் உமது மகனிடம் அழைத்து செல்வாய் (2) ஞானத்தின் பிறப்பிடம் இயேசு அல்லவா திருமகன் இயேசுவின் தாயே நீயல்லவா ஞாலம் செழித்திட தாயே வருவாயே ஞானம் எங்களுக்கு நீயே தருவாயே உமது மாசற்ற இதயத்திலே இடம் ஒன்று தாரும் இராக்கினியே (2) |