Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1036-அழகின் முழுமையே தாயே  
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலையை மிதித்தவளே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எமக்களித்தாயே

இருளே சூழ்ந்திடும்போதே
உதயத்தாரகை போலே
அருளே நிறைந்த மா மரியே
அருள் வழி காட்டிடுவாயே

அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப்பின் செல்வோம்
உன்னை வழியாய்க் கொள்வோம்
என்றுமே பாவத்தை வெல்வோம்








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா