1032-அலையொளிர் அருணனை |
அலையொளிர் அருணனை அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ காலமும் காத்தருள்வாய் அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே பொல்லாத கூழியின் தொல்லைகள் நீங்கிட வல்ல உன் மகனிடம் கேள் அகோரப் போர் முழுங்கி அல்லலும் தோன்றுதன்றோ எல்லோரும் விரும்பிடும் நல்லதோர் அமைதியை சொல்லாமல் அளித்திடுவாய் |