1031-அலைகடல் ஒளிர்மீனே |
அலைகடல் ஒளிர்மீனே -செல்வ ஆண்டவர் தாயாரே - 2 நிலைபெயராக் கன்னி - மோட்ச நெறிக்கதவே வாழி வானவன் கபிரியேலின் - ஸ்துதிய மங்கள மொழி ஏற்பாய் - 2 ஞான சமாதான வழி - நாம் நடந்திட தயை செய்வாய் பாவ விலங்கறுப்பாய் - குருடர் பார்த்திட ஒளி விடுப்பாய் - 2 சாவுறும் தீமையெல்லாம் - நீக்கி சகல நன்மையளிப்பாய் தாயென உனைக்காட்டாய் - உந்தன் தனயனாம் யேசுவுக்கு - 2 சேயர்நாம் செய்யும் செபங்கள் - எல்லாம் சேர்த்து நீ ஒப்புவிப்பாய் கன்னியரில் உத்தம - தாயே கடும் பவம் நின்றெம்மை ஆள் - 2 உன்னத சாந்தமுள்ள - மரியே உத்தம வரம் ஈவாய் |