Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1029-அருள் நிறை மரியே வாழ்க  
அருள் நிறை மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களுள் சிறந்தவள் நீயே
மாமரியே நீ வாழ்க

அன்னையே வாழ்க வாழ்க
லூர்து அன்னையே வாழ்க வாழ்க
அன்னையே வாழ்க வாழ்க
மடு அன்னையே வாழ்க வாழ்க

வாழ்வின் கருணையாய் வந்திடுவார்
வறியவர் துயரம் தீர்த்திடுவார்
உரிமையை இழந்து உழல்வோர்க்கு
உலகம் காண வழி செய்வாய்
உள்ளங்கள் இணைந்தே போராடும்
மனிதர்க்கு துணையாய் நின்றிடுவாய்
உறவில் மலரும் வாழ்வாக
உண்மை வழியைக் காட்டிடுவாய்

மனதில் நம்பிக்கை வளர்த்திடுவாய்
மனிதம் காத்திட துணை செய்வாய்
உரிமைக் குரலாய் எழும்போது
அடிமை சிறையைத் தகர்த்திடுவாய்
விடியலுக்காக வாழ்ந்திடவே
விடுதலைத்தாயாய் அருகிருப்பாய் - 2
மண்ணில் மகத்துவம் கண்டிடவே
மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாய்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா