Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1027-அருள் நிறையே எங்கள் மரியே  
அருள் நிறையே எங்கள் மரியே
உன் நாமம் என்றும் வாழ்க
திரு உருவே எங்கள் அன்னையே
உன் அன்பு என்றும் வாழ்க (2)

கருவினில் இறைவனைத் தாங்கிடவே
இறைவனும் உன்னையே தெரிந்து கொண்டார் (2)
இதயத்தில் இறைவனைச் சுமந்திடவே
இறைவனும் மனிதனைத் தேர்ந்துகொண்டார் (2)
இதயமும் இறைவனின் கருவறையே
அருள் ஒளி மலர்ந்திடும் வைகறையே

ஆகட்டும் என்றொரு சொல்லினிலே
மீட்பினை உலகுக்கு நீ தந்தது (2)
ஆகட்டும் என்றே இறை பணிந்தால்
மீட்பரின் பணிகளைத் தொடர்கின்றது (2)
இறைவனின் திருவுளம் நிறைவேறினால்
அருள் நிறை உலகமே பிறக்கின்றது







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா