Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1026-அமலோற்பவியே அருள் நிறை  
அமலோற்பவியே அருள் நிறை தாயே வாழ்க வாழ்க
மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க

வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே
அன்னையே வாழ்க அமலியே வாழ்க வாழ்க வாழியவே

மாமரியே மாதவளே வாழ்க வாழ்க
மாந்தர்களைக் காப்பவளே வாழ்க வாழ்க
மனமகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க
தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க

இறைவனின் திருமகளே வாழ்க வாழ்க
மறை போற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க
வான் மண்ணின் இராக்கினியே வாழ்க வாழ்க
வாழ்த்துகின்றோம் போற்றுகின்றோம் வாழ்க வாழ்க







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா