1025-அம்மா என்றே உன்னை |
அம்மா என்றே உன்னை அடைவேன் - அருள் மழை என்னில் பொழிந்திட அழைப்பேன் அழைத்த என் குரலினைக் கேட்பாய் - நிதமும் அரவணைத்தே என்னில் நிறைவாய் அமைதியும் இன்பமும் உண்டு - உன்னை அடைந்திட்டால் வாழ்வே உண்டு (2) வழி காட்டிடுவாய் என்னை நடத்திடுவாய் - உந்தன் வழி நான் தொடர்ந்திட அருள் புரிவாய் காலங்கள் மறைவதும் உண்டு - கொள்ளும் கோலங்கள் அழிவதும் உண்டு (2) உன்னை அழைத்துவிட்டால் உந்தன் அருளுண்டு - என்னை அணைத்திட அன்பு கரங்களுண்டு |