Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1022-அம்மா வாழ்க மரியே  


அம்மா வாழ்க மரியே - எங்கள்
இறைவனின் தாய் நீயே
உந்தன் வரம் கேட்டு நின்றோம்
கரங்கள் தூக்கி விடுமே - எங்கள்
கரங்கள் தூக்கி விடுமே

தேவ மகனை நீர் தாங்கி சுமந்தாயே
பாசத்தை என்ன சொல்வோம் (2)
உந்தன் அன்பின் கோலத்தை
பெண்மை வீரத்தை - கண்டு
நாம் வியக்கின்றோம் (2)
உம்மை கரங்கூப்பி வணங்குகின்றோம் - 2

சிலுவையடியிலே சிந்தை குலைந்தாயே
துயரம் சுமந்த தாயே (2)
உந்தன் தியாக வேட்கையை
மீட்பின் பங்கினை - எண்ணி
நாம் வியக்கின்றோம் (2)
எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம் - 2



 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா