Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1021-அம்மா நீ தந்த செபமாலை  
அம்மா நீ தந்த செபமாலை
செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை (2)
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் (2)

சந்தோச தேவ ரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் - 2
எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் - அவரைக்
காணிக்கை தந்து கலங்கியதும் காணாமல் தேடிப் புலம்பியதும்
வீணாகவில்லை தாய்மரியே உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

துயர் நிறை தேவ ரகசியத்தில் தூயரின் வியாகுலங்கள் கண்டோம் - 2
உயர் வாழ்விழந்த எமக்காக உன் மைந்தன் உயிர் தந்தார் - அவரை
சாட்டைகளும் கூர் முள்முடியும் வாட்டிய சிலுவைப்பாடுகளும்
சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா தாய் நெஞ்சம் நொறுங்கியதாரறிவார்

மகிமையின் தேவ ரகசியத்தில் மாதா உன் மாண்பினைக் கண்டோமே - 2
சாகாமை கொண்ட நின் மகனார் சாவினை வென்றெழுந்தார் - அவரே
ஆவியால் உன்னை நிரப்பியதும் தாயுன்னை வானுக்கு எழுப்பியதும்
மூவுலகரசி ஆக்கியதும் மாதா உன் அன்புக்கு தகும் பரிசே








 

அம்மா நீ தந்த செபமாலை செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம