Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1020-அம்மா உந்தன் மாண்பு கண்டோம்  
அம்மா உந்தன் மாண்பு கண்டோம்
அன்னை உன் திருத்தலத்தில் - வரும்
அடியவர்க்கு தினம் தயை பொழிந்தாய்
மாறா அன்பாலே

அமைதியைப் பொழியும் உன் திருமுகத்தை
நாங்கள் காண்கையிலே (2)
சுமைகளை மறந்தோம் சுகம் பல அறிந்தோம்
சுந்தரத் தாய் மரியே (2)

வாழ்வின் துயரம் சூழ்கையிலே
வாடிய மலரானேன் (2)
வசந்தமாய் வந்தாய் வரம் பல தந்தாய்
ஆரோக்கிய தாய்மரியே (2)

அருள் நிறை மரியே வரம் தரும் சுகமே
உன் பதம் நாடுகிறோம் (2)
அருமைகள் அறிந்தோம் அடைக்கலம் அடைந்தோம்
ஆதரி தாய்மரியே (2)







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா