1019-அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா |
அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா எந்த இடர் வரினும் அந்தத் தடை உடைத்து எந்தன் கரம் பிடித்தே என்னை வழிநடத்து மரபுகள் உடைபட மகன் சுமந்தாய் - அந்த இறைமகன் பிறந்திட இடர் கடந்தாய் அமுதுடன் ஞானமும் கலந்தளித்தாய் - மகன் அறிவுடன் புகழ்பெற தினம் உழைத்தாய் உந்தன் மகன் போலே இந்தப் பூமியிலே இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு எந்தன் மூளைக்குள் ஞான அறிவூட்டு எம்மில் ராஐhங்கம் அமைத்திட வழிகாட்டு திருமகன் பாதையில் தடம் பதித்தாய் - அவர் வாழ்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய் சிலுவையில் மகன் வர உடன் நடந்தாய் - மகன் இயேசுவை இழந்து எனை ஈன்றாய் உந்தன் மகன் போலே இந்தப் பூமியிலே எங்கும் சமத்துவம் நிலைத்திட எமைத் தூண்டு மண்ணில் நீதியில் உயிர்பெற உரமூட்டு அன்பின் ராஐhங்கம் அமைத்திட வழிகாட்டு |