1018-அம்மா அம்மா நீயம்மா |
அம்மா அம்மா நீயம்மா உந்தன் பிள்ளை நானம்மா தேடி வந்தேன் நானம்மா உந்தன் பிள்ளை நானம்மா அம்மா அம்மா நீயம்மா லூர்து மாநகர் தாயம்மா எம்மைக் காக்கும் தாய் நீயே கண்ணீர் துடைத்துக் காப்பாயே உம்மைப் போல எம்மை நாளும் மீட்பின் பாதை சேர்ப்பாயே உந்தன் அருளைப் பெற்றோமே உந்தன் சாட்சியாய் வருவோமே துன்பம் துயரம் வரம்போது துணையாய் நிற்கும் தாய் நீயே ஆறுதல் தேடி ஆலயம் நாடி வந்தோர்க்கருளும் தாய் நீயே ஆவே கீதம் பாடிடுவோம் அன்பின் சாட்சியாய் மாறிடுவோம் அன்பின் அன்னை நீயம்மா ஆறுதல் அளிக்கும் தாயம்மா இரவும் பகலும் எங்கும் எதிலும் காக்கும் கரமே உனதம்மா உந்தன் பிள்ளை நானம்மா கவலை எனக்கு ஏதம்மா |