1017-அம்மா அம்மா எங்கள் அம்மா |
அம்மா அம்மா எங்கள் அம்மா நீதானம்மா உம்மை நம்பித் தேடி வந்தோம் கண்பாரம்மா எம்குறை தீர்ப்பாயா எம் நோய் தீர்ப்பாயா உம் வழி நடந்திட நீ துணை வருவாயா அம்மா என்ற குரல் கேட்டு நீ வந்ததும் எம் உள்ளம் மலராக மகிழுதம்மா அன்பே என்ற குரல் கேட்டு யாம் வந்ததும் - எம் உள்ளம் உறவாலே நிறையுதம்மா நீ ஆசையாக எம்மை அணைத்துக்கொண்ட வேளை மகிழ்வோமம்மா அம்மா அம்மா எங்களம்மம்மா (2) வானதூதர் குரல்கேட்டு நீ வந்ததும் - உன் உள்ளம் ஆவியால் நிறைந்ததம்மா ஆம் என்று பதிலை நீர் சொன்னதும் அகிலமே உன்னாலே மலர்;ந்ததம்மா நீ ஆசையாக எம்மை அணைத்துக்கொண்ட வேளை மகிழ்வோமம்மா அம்மா அம்மா எங்களம்மம்மா (2) |