1016-அம்மா அம்மா மரியே |
அம்மா அம்மா மரியே தூய ஆவியின் ஓவியம் நீயே (2) அருளே நிறைந்த தாயே (2) எங்கள் அனைவர்க்கும் நீ அடைக்கல மாதாவே வாழ்க மரியே வாழ்க தாயே - (2) இறைவனின் ஆவி உன் மீது வர உன்னத வல்லமை நிழலுமிட (2) இறைமகன் யேசுவைக் குழந்தையென (2) உந்தன் உதரத்தில் சுமந்;த கன்னித் தாயே வாழ்க ஆவியின் வருகைக்கு காத்திருந்த சீடர்கள் குழுவினில் ஒருங்கிணைந்து (2) இறைவனைப் புகழ்ந்து nஐபித்திருந்து (2) தூய ஆவியில் முழுமை அடைந்த தாயே வாழ்க |