1015-அம்மா என் அம்மா நீதானம்மா |
அம்மா என் அம்மா நீதானம்மா (2) பிள்ளை உன்பிள்ளை நான்தானம்மா ஆரோக்கியம் தருகின்ற தாய் நீயம்மா (2) அடைக்கலம் தருகின்ற தாய் நீயம்மா அருளின் ஒளியைத் தந்தீரே ஆசையாய் அன்பைப் பொழிந்தீரே இதயத்தில் என்னை நினைத்தீரே உம் இதயம் மகிழ வாழ்ந்திடுவேன் அம்மா என்று அழைக்கும்போது மகனே என்று ஓடி வந்து (2) கலங்கிய என்னைக் கரம் பிடித்தாய் உறவில் நாளும் வளர்ந்திடவே ஊக்கம் என்னில் தந்தீரே உந்தன் உள்ளம் நினைப்பதுபோல் நான் உலகில் நாளும் வாழ்ந்திடுவேன் அம்மா என்று அழைக்கும்போது மகளே என்று ஓடி வந்து (2) கலங்கிய என்னைக் கரம் பிடித்தாய் |