Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1014-அம்மா அம்மா அன்பின்  
அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அருளைப் பொழிவதும் நீதானம்மா
ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா

மணிமுடி அணிந்த மாதவளே - இந்த
மாநிலம் காத்திடும் தூயவளே - 2
உண்மையை ஊட்டிடும் பேரழகே
உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே - நீ
துணை தந்து காத்திட வேண்டுமம்மா - 2
அன்பினில் என்றும் அரவணைத்து - எமை
அருளினில் வளர்த்திட வேண்டுமம்மா







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்