Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1013-அம்மா உந்தன் அன்பினிலே  
அம்மா உந்தன் அன்பினிலே
அருள்வாய் எமக்கு அடைக்கலமே

இறைவன் படைத்த எழிலே
இயேசுவைத் தந்த முகிலே
தூய்மை பொழியும் நிலவே
துணையே வாழ்வில் நீயே

புவியோர் எங்கள் புகழே
புனிதம் பொங்கும் அழகே
உம் மகன் புதிய உறவில்
எம்மையும் வதியச் செய்வாய்

மீட்பின் முதற்கனி ஈன்ற
மலரே எங்கள் மகிழ்வே
இயேசுவின் காலடித் தடமே
எம்மையும் நடத்திச் செல்வாய்







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்