Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1011-அம்மா என்றே உன்னை  


அம்மா என்றே உன்னை அழைத்திடுவேன் - 2
இம்மானிலத்தின் நல் மாதிரியே
எம்மாத்திரம் உம் புகழே அம்மா

புவி மீட்ட பரமனுடன் சேர்ந்தெம்மை மீட்டாயே
புவிதனில் வாழும் மாந்தருக்கு
புது அன்னையாகக் கல்வாரியில்
புது ஒளி தந்து புது நலம் சேர்க்க
இறைவனே உனைத் தந்தார் அம்மா

தாயவளின் அன்பிலே சேயும் மகிழ்ந்திருக்கும்
தரணியில் நாளும் தவிப்பதென்ன
தாயுந்தன் அன்பின் நிகரென்ன
இயேசுவைப்போல் என்னையும் அணைத்திட
இனியொரு தடையென்ன அம்மா

ஆதவனாம் யேசுவினால் ஒளிரும் நிலவானாய்
தாயினைப்போல் பிள்ளையென்று
தண்டமிழ் அறிஞர் சொல்லி வைத்தார்
தாயுனைப்போல் நானும் இன்று
ஆகிடும் வரம் வேண்டும் அம்மா






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்