1010-அம்மா என்று அழைத்தால் |
அம்மா என்று அழைத்தால் குழந்தாய் என்று வருவாய் அபயம் என்று சொன்னால் அன்பாய்த் தூக்கி நெஞ்சில் வைத்து என்னைக் காத்துக் கொள்வாய் வேடிக்கை உலகம் பின்னால் நான் சென்றேன் வேண்டியதெல்லாம் தருமென்று நான் சென்றேன் (2) மீளாத் துன்பம் நானடைந்தேன் என் நிலை நானுணர்ந்தேன் அம்மா உனை அழைத்தேன் உலக மாந்தர்க்கு கலங்கரை விளக்காய் நீ கண்மணியாய் எமை நாளும் காப்பவள் நீ (2) உன்னை நான் பிரிந்திடேன் நாழியும் நான் மறவேன் அம்மா உனை அழைத்தேன் மின்னுவதெல்லாம் பொன்னென்று நான் கண்டேன் வெளுத்தவை யாவும் பாலென்று நான் உண்டேன் பொன்னும் தீயானது பாலும் நஞசானது அம்மா உனை அழைத்தேன் |