Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1008-அடைக்கலமே, அடைக்கலமே  

அடைக்கலமே, அடைக்கலமே தாயே
அடியாரை அம்புவியில் ஆதரித்தாளுவாயே

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா? 2
மங்கையர்க்கரசியே மாமரித்தாயே
துங்கசூசைமுனியின் தூய மணாளியே.

இல்லற வாழ்க்கையின் இன்னல்கள் யாவையும்
இன்பமாய் ஏற்றுநாம் இந்நிலம் வாழ்ந்துமே - 2
உன்னத மோட்சத்தை நிர்ணயப்படுத்திட
நிர்மல இராய்க்கினி நீ தயை புரிகுவாய்.

ஆறுகுடம் தண்ணீரை அரிய இரசமாக்கி
அற்புதம் செய்த உந்தன் ஆருயிர் நேச மைந்தன் - 2
ஆசியை அடைந்து நாம் மாசின்றி வாழ்ந்திட
அனுக்கிரகம் செய்வாய் அமல உற்பவ மாதே!





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்