நன்றிப்பாடல்கள் | உதயத்தின் வரவில் உன் |
உதயத்தின் வரவில் உன் அன்பினைப் பாடி நன்றிகள் கூற வந்தோம் சிகரமாய் தெரியும் உன் அருளினைக் கண்டு மகிழ்ந்து பாடுகின்றோம் நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி தலைவா அர்ச்சனைப் பீடத்தில் அழகு தந்தாய் அர்ப்பணமாகிடும் வரமும் தந்தாய் புதுப்பித்துப் பகிரும் திருச்சபை தந்தாய் புதுப்படைப்பாகும் அருளும் தந்தாய் நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி தலைவா புன்னகை பூக்கும் மனிதரைத் தந்தாய் புனிதமாய் வாழும் வரமும் தந்தாய் உறவோடு வாழும் இதயம் தந்தாய் மன்னிக்கும் மனமும் எனக்குத் தந்தாய் நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி தலைவா |