நன்றிப்பாடல்கள் | நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம் |
நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம் நாளும் நமை காக்கும் இறை யேசுவை அல்லும் பகலும் செல்லும் இடமெங்கும் அன்னையாய் தந்தையாய் அருகிலிருந்து அணைக்கும் தேவனை கோடி துன்பம் வந்தபோதும் கோடிய நோயில் வீழ்ந்த போதும் தேடி வந்து நம்மைக் காத்திட்டார் வாடிய மலரைப் போல் வதங்கியே வீழ்ந்தாலும் அன்னையாய் தந்தையாய் அருகிலிருந்து அணைக்கும் தேவனை உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மைச் சூழ்ந்த போதும் விலகவில்லை அன்பர் இயேசுவே (2) நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் அன்னையாய் தந்தையாய் அருகிலிருந்து அணைக்கும் தேவனை |