Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள் உமை பாடும் பொழுதெல்லாம்  

உமை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
உமை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை ஏசுவே
நினைவாகி உணவாகி உயிராகியே - என்
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீர்
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீர்

உமை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே

என் தாயின் கருப்பையில்
உருவாகும் முன்னாலே
நீ தானே என்னை நினைத்தாய்
என் தாயின் கருப்பையில்
உருவாகும் முன்னாலே
நீ தானே என்னை நினைத்தாய்
என் பேரை உன் கையில்
அழியாத நினைவாக
நீ தானே பொரித்து வைத்தாய்
எனை விட்டு விலகுவதில்லை - நீர்
என்னை கைவிடுவதில்லை
கண் இமையாக சிறகாக
அணைத்தென்னை காக்கின்ற


உமை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை ஏசுவே
நினைவாகி உணவாகி உயிராகியே - என்
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீர்
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீர்

உமை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே

சுமையாலே மனம் சோர்ந்து
அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உம் வார்த்தைகள்
சுமையாலே மனம் சோர்ந்து
அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உம் வார்த்தைகள்
இமை காக்கும் விழி போலே
எனை சூழ்ந்து தினம் காக்கும்
உம் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் - நான்
பயம் கொண்ட வேளைகளில்
வழி துணையாக துயர் போக்கும்
மருந்தாக வருகின்ற










 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்