நன்றிப்பாடல்கள் | துள்ளித்துள்ளி ஸ்துதிகள் |
துள்ளித்துள்ளி ஸ்துதிகள் பாடுவோம் - நீ நன்றி சொல்லி நன்றி சொல்லி இயேசுவைப் போற்றுவோம் அவர் செய்திடும் நன்மைகள் கோடி - அதை எண்ணி எண்ணி என்னைப் பாடு பாடு நம்முடனேயுள்ள ஒவ்வொரு அணுவும் இயேசுவின் அன்பிற்குச் சான்று அணுக்களில் உள்ள ஆற்றல் அனைத்தையும் அறிந்திருப்பவர் யாரு எண்ண எண்ண விந்தைதான் வியந்து மகிழ்ந்து பாடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளிலும் தெய்வக் கருணையின் கொடைதான் உன்னையும் என்னையும் கண்ணின் மணிபோலக் காத்து வருவதும் அவர்தான் குறையில்லாத அவர் அன்பை இடைவிடாமல் பாடுவோம் |