Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள்   பீடம் முன்பு மண்டியிட்டேன்  
பீடம் முன்பு மண்டியிட்டேன்
எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே-2
இதுநாள் வரையில்  M...M....M.
எனக்குச் செய்த  M...M....M.
நன்மைகள் யாவையும் அறிந்தேன் தேடி
வந்தேன் கரங்கள் குவித்தேன் நன்றி சொல்லிடவே.

இடரும் போது வந்து காத்தாய்
துயரில் என்னை தேற்றி விட்டாய்-2
போகும் வழியெல்லாம்
துணையாய் இருந்தாயே -2
உன்னுடன் இணைந்தே பயணிக்க
இதோ ஓடி வந்தேன்

திணறும் போது திடம் தந்தாய்
உயர்வில் என்னை ஏற்றி விட்டாய்-2
அழைக்கும்போதெல்லாம்
பொருட்டாய் இருந்தாயே -2
உன்னுடன் மகிழ்ந்தே வாழ்ந்திட
இதோ நாடி வந்தேன்









 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்