Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள்   ஓயா உன் கருணைக்கு  


ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி
ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி
பாயாத உள்ளமெல்லாம் பாய்ந்து ஓடிடும்
காயாமல் அவை அங்கு பலன் நல்கிடும் - என்றும்
ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி(2)

காலங்கள் மாறலாம் கடல் வற்றிப் போகலாம் - ஆனால்
உன் கருணையோ மாறாது
மலை மண்ணாய் போகலாம் மனம் கல்லாய் மாறலாம்  - ஆனால்
உன் கருணையோ தீராது
மாறாத இறைவா தீரா உன் கருணை
இறவாத வரையில் மறவாது புகழ்வேன்


சொந்தங்கள் மாறலாம் சுவையற்று போகலாம்  - ஆனால்
உன் கருணையோ மாறாது
எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம்  - ஆனால்
உன் கருணையோ தீராது
மாறாத இறைவா தீரா உன் கருணை
இறவாத வரையில் மறவாது புகழ்வேன்








 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்