நன்றிப்பாடல்கள் | ஒப்பில்லா உன் கண்மணியாய் |
ஒப்பில்லா உன் கண்மணியாய் காத்திடும் இறைவா, நன்றி தாயாய் இருந்து மார்போடணைத்து தாங்கிடும் தலைவா, நன்றி - 2 அன்பால் என்னை நனைத்தீரே, அருளால் என்னை நிறைத்தீரே - 2 கருவில் அறிந்தீர், கரத்தில் பொறித்தீர், போற்றி இறைவா போற்றி ! - ஒப்பில்லா கருவாய் இருந்து கருவாக உயிராய் என்னில் வந்தீரே -2 பத்து திங்கள் பக்குவமாய் உதிரம் கொடுத்து வளர்த்தீரே -2 அன்பால் என்னை நனைத்தீரே, அருளால் என்னை நிறைத்தீரே - 2 கருவில் அறிந்தீர், கரத்தில் பொறித்தீர், போற்றி இறைவா போற்றி ! - ஒப்பில்லா அன்னை தந்தையாய் உமை ஏற்க அனைத்தும் நீயாய் இணைந்தீரே -2 சேயாய் உன் அடி தொடர்ந்திடவே காக்கும் தெய்வமாய் நடந்தீரே -2 அன்பால் என்னை நனைத்தீரே, அருளால் என்னை நிறைத்தீரே - 2 கருவில் அறிந்தீர், கரத்தில் பொறித்தீர், போற்றி இறைவா போற்றி ! - ஒப்பில்லா |