நன்றிப்பாடல்கள் | நெஞ்சே நீ இறைவன் |
நெஞ்சே நீ இறைவன் புகழைப்பாடு நெஞ்சே நீ அவரைப் போற்றிப்பாடு 2 ஓஓஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வழியோரம் தவித்து நின்றேன் விழியோரம் கடந்து சென்றாய் - 2 பாதை காட்டினாய் - உன் பாதம் நோக்கினேன் - 2 என்றும் உன்னை மறவேன் - ஓ..ஓ. நீரின்றிக் களைத்து நின்றேன் நீரோடை அழைத்துச் சென்றாய் - 2 தாகம் போக்கினாய் - உன் தியாகம் போற்றினேன் - 2 என்றும் உன்னை மறவேன் - ஓ..ஓ. அஞ்சாமல் பாவம் செய்தேன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாய் - 2 பாவம் போக்கினாய் உன் பாசம் காண்கிறேன் - 2 என்றும் உன்னை மறவேன் - ஓ..ஓ. |