நன்றிப்பாடல்கள் | நன்றி இயேசுவே |
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே இன்றுமெங்கும் நன்றிப் புகழ் பாடிடுவோமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலு அன்பரும் நீயே என் ஆறுதல் நீயே அடைக்கலம் நீயே எங்கள் இயேசுவே துன்பவேளையில் தாங்கிடுமெம்மை கவலை நீக்கி கனிந்து பார்த்து வழிநடத்துமே மீட்பரும் நீயே மருத்துவவர் நீயே மருந்தும் நீயே எங்கள் இயேசுவே நோய்நொடிகளில் நேசமோடென்னை அருகிருந்து கூட்டி என்னை தேற்றிடுவீரே வழியும் நீயே உண்மையும் நீயே உயிரும் நீயே எங்கள் இயேசுவே பாவ வாழ்க்கையில் நோகும் வேளையில் ஆயனாக தேடி என்னை காரும் இயேசுவே |