Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள் நன்றி நன்றி நன்றி சொல்லி  
நன்றி நன்றி நன்றி சொல்லி
தினமும் பாடுவேன்
நல்ல தேவன் இயேசுவுக்கு
நன்றி கூறுவேன் -2
போற்றி புகழுவேன் - அவரை
மகிழ்ந்து பாடுவேன்
என்றும் நன்றி கூறுவேன் ( நன்றி )

வரங்கள் யாவும் எனக்குத் தந்தார்
நன்றி கூறுவேன்
வளங்கள் வாழ்வில் மிளிரச் செய்தார்
நன்றி கூறுவேன் -2
நலமும் பலமும் பெருகச் செய்தார்
நன்றி கூறுவேன்
வாழ்வும் வழியும் சிறக்கச் செய்தார்
நன்றி கூறுவேன் ( நன்றி )

அனுதினம் எனக்கு உணவு தந்தார்
நன்றி கூறுவேன்
அரவணைத்து அன்பு செய்தார்
நன்றி கூறுவேன் -2
ஆற்றல் அறிவும் அதிகம் தந்தாய்
நன்றி கூறுவேன்
அருளில் நானும் வாழச் செய்தாய்
நன்றி கூறுவேன் ( நன்றி )







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்