திருப்பலிப் பாடல்கள் | விண்ணிலும் மண்ணிலும் |
விண்ணிலும் மண்ணிலும் நிறைந்த எம் இறைவா வியப்புடன் வாழ்த்தி வணங்குகிறோம் உலகினில் உன் அன்பு ஓங்குக எங்கும் உமையே வேண்டுவோர் திருவருள் பெறுக உலகினைப் படைத்து உயிரினைக் காத்த உம் திரு நாமம் புகழ் பெறுக உமது அரசு உலகினில் வருக உம் திரு விருப்பம் நிறைவேறுக தூயவர் தூயவர் தூயவர் என்று விண்ணவர் அணிகள் பாட தூயவர் தூயவர் தூயவர் என்று மண்ணவர் நடனம் ஆட இத்தருணம் அருள்பொழிவாய் இறையே இறையே உயிரே எம் இறைவா....... ஒவ்வொரு நாளும் எங்களுக்குணவு அளித்திடும் உமது கருணையே போற்றி தாம் தீம் தாம் தரிகம பத கமத மண்ணுக்கு எம்மை மாண்புறச் செய்தாய் மண்ணிலே தீமை அகற்றியே காப்பாய் தூயவர் தூயவர் தூயவர் என்று விண்ணவர் அணிகள் பாட தூயவர் தூயவர் தூயவர் என்று மண்ணவர் நடனம் ஆட இத்தருணம் அருள்பொழிவாய் இறையே இறையே உயிரே எம் இறைவா....... |