திருப்பலிப் பாடல்கள் | பரலோகத்தில் இருக்கின்ற 3 |
பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுக உம்முடைய ராஜ்ஜியம் வருக உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக எங்கள் அனுதின உணவை இன்று எங்களுக்கு அளித்தருளும் எங்களுக்கு தீமை செய்தோரை நாங்கள் பொறுப்பது போல் எங்கள் பாவங்களை பொறுத்தருளும் எங்களை சோதனையில் விழவிடாதேயும் தீமையிலிருந்து இரட்சித்தருளும் ஆண்டவரே தீமையிலிருந்து எங்களை விடுவித்து எம் வாழ்நாளில் சமாதானத்தை அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம் உமது இரக்கத்தின் துணையால் நாங்கள் அடிமையிலிருந்து விடுதலை பெற்று நிறை வாழ்வு பெறுவோமாக நாங்கள் நம்பும் பேரின்ப வாழ்வை இயேசுவின் வருகையை எதிர் பார்க்கின்றோம் ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சிமையும் என்றும் உமதே ஆமென்.. |