விசுவாசப்பிரமாணம் | 7இறைவா உங்களைப் போற்றுகின்றோம் |
இறைவா உங்களைப் போற்றுகின்றோம் நீர ஒருவரே என்று நம்புகிறோம் (2) இல்லாமை தனில் இருந்து இங்குள எல்லாம் படைத்ததை நம்புகின்றோம் கடவுளின் திருமகன் யேசு உலகினை மீட்க வந்தாரென நம்புகின்றோம் கன்னிமரியிடம் தூய ஆவியால் கர்த்தர் பிறந்ததை நம்புகின்றோம் பாடுகள் ஏற்று சிலுவையில் மாண்டு மண்ணில் மறைந்ததை நம்புகின்றோம் பாவத்தை வென்றது போலவர் சாவினை வென்று உயிர்த்ததை நம்புகின்றோம் வானகம் சென்று வல்ல நம் தந்தையின் வலப்புறம் திகழ்வதை நம்புகின்றோம் வாழ்வோர் இறந்தோர் யாருக்கும் இறுதியில் தீர்ப்புரைப்பாரென நம்புகின்றோம் அருள் நிறை ஆவியை ஒன்றிப்பின் ஆவியை ஆற்றலின் ஆவியை நம்புகின்றோம் இறைமகன் உலகிற்கு மீட்பை வழங்கிட திருச்சபை அமைத்ததை நம்புகின்றோம் இறைவனுக்குகந்தவர் புனிதர்களோடு எம் உறவுகள் மங்களம் நம்புகின்றோம் பரிசெனும் சாபத்தில் உழல்வதை விடுவிக்கும் பாவமன்னிப்பை நம்புகின்றோம் கர்த்தரின் வழியில் உலகின் இறுதியில் உயிர்ப்பின் நம்புகின்றோம் நற்செயல் பரிசு விண்ணரசு அதுபோல் தீமைக்கு நரகம் நம்புகின்றோம் |