Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப் பாடல்கள் -  
இறைமகன் இயேசு ...........  இறையரசு வர செபிப்போமாக

பரலோகத்தில் இருக்கின்ற
எங்கள் பிதாவே எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுக
உம்முடைய இராட்சியம் வருக
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல்
பூலோகத்திலும் செய்யப்படுவதாக

எங்கள் அனுதின உணவை இன்று
எங்களுக்கு அளித்தருளும்
எங்களுக்கு தீமை செய்வோரை
நாங்கள் பொறுப்பதுபோல்
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்
தீமையில் இருந்து இரட்சித்தருளும்
ஆண்டவரே தீமையிலிருந்து எங்களை விடுவித்து
எம் வாழ்நாளில் சமாதானத்தை அருள் புரிய
உம்மை மன்றாடுகிறோம்
உமது இரக்கத்தின் துணையால் நாங்கள்
அடிமையிலிருந்து விடுதலை பெற்று
நிறைவாழ்வு பெறுவோமாக
நாங்கள் நம்பும் பேரின்ப வாழ்வை
இயேசுவின் வரவை எதிர்பார்க்கின்றோம்
ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சிமையும்
என்றும் உமதே

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே