Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப்பாடல் 4  
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)
கிறீஸ்துவே இரக்கமாயிரும் (2)
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)

உன்னதங்களிலே இறைவனுக்கே

மாட்சிமை உண்டாகுக
உலகினிலே நல்மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக

புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப்படுத்துகின்றோம் யாம்

உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே

ஆற்றல் அனைத்தும் கொண்டு
இலங்கும் தேவ தந்தை இறைவனே
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே

ஆண்டவராம் எம் இறைவனே
இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாகச்
செனித்த இறைவன் மகனே நீர்

உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே ஆமென்.

ல்லேலூயா.....அல் அல்லேலூயா... அல் அல்லேலூயா.அல்

அல்லேலூயா.....அல் அல்லேலூயா... அல் அல்லேலூயா...அல்

நான் உங்களை நண்பர்கள் என்றேன் - ஏனெனில்
தந்தையிடமிருந்து .... நான் கேட்டதையெல்லாம்
உங்களுக்கு அறிவித்தேன் - என்கின்றார் ஆண்டவர்

அல்லேலூயா.....அல் அல்லேலூயா... அல் அல்லேலூயா....அல்
அல்லேலூயா.....அல் அல்லேலூயா... அல் அல்லேலூயா...அல்

தூயவர் தூயவர் தூயவர் (2)
மூவுலகிறைவனாம் ஆண்டவர்
தூயவர் தூயவர் தூயவர்

வானமும் வையமும் யாவும் உம்
மாட்சிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசான்னா (2)
தூயவர் தூயவர் தூயவர்

ஆண்டவர் திருப்பெயரால்
வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா (2)
தூயவர் தூயவர் தூயவர்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எம்மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எம்மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.

ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்
எல்லாம் வல்ல தந்தை அவரே
வானமும் வையமும் காண்பவை யாவும்
காணாதவையும் படைத்தவர் அவரே.
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்

தந்தை கடவுளின் ஒரே மகனாய்
ஜெனித்தவரான ஒரே ஆண்டவர்
இயேசுக் கிறிஸ்து மீட்பரையும்
முழுமனதுடனே விசுவசிக்கின்றேன்.
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்

யுகங்களுக்கு எல்லாம் முன்னரே இவர்
தந்தையினின்று மகனாய் ஜெனித்தார்
கடவுளினின்று கடவுளாகவும்
ஒளியினின்று ஒளியுமாகவும்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்

மெய்யங் கடவுளிடமிருந்தே இவர்
மெய்யங் கடவுளாகவும் ஜெனித்தார்
ஜெனித்தவரே இவர் படைப்புயிரல்ல
கடவுளோடிவர் ஒரே பொருளானவர்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்

இவர் வழியாகவே யாவும் உண்டாயின
மானிடரான நமக்காகவும் நமது மீட்புக்காகவும்
வானகமிருந்து வையகம் தனிலே வந்தார் இவரே
கன்னிமரியிடம் தூய ஆவியால் மனுவுடல் எடுத்து மனிதன் ஆனார்.
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்

மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் ஆட்சியில் சிலுவையில் அறையுண்டு
பாடுகள் பட்டு மரித்து கல்லறை தனிலே அடக்கம் செய்யப்படலானார்.
வேதாகமத்தின் எழுதியபடியே மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தாரே.
வானகமிருந்து தந்தையின் வலத்தில் மகிமையோடு இவர் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோர் இறந்தோர் அனைவருக்கும் தீர்ப்பிட மாட்சிமையுடனே மீளவும் வருவார்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்

அவரது அரசுக்கு முடிவு பெறாது
தந்தை மகனிடமிருந்து புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான
தூய ஆவியை விசுவசிக்கின்றேன்.
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்

தந்தை மகனாம் இருவரோடொன்றாய்
வணக்கமும் மகிமையும் இவர் பெறுகின்றார்.
இறைவாக்கினரின் வாய்மொழியாக
பேசியருளிய இறைவன் இவரே
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
 
ஒரே தூய கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபைதனையும்
பாவமன்னிப்புக்கான ஒரே ஒரு திருமுழுக்கையும் ஏற்றுக் கொள்கின்றேன்.
இறந்தோர் இறுதியில் உயிர்க்கச் செய்வார்
என நான் உறுதியாய் விசுவசிக்கின்றேன்
இதுவரை இருக்கும் மறு உலகத்தின் வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.

ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன் விசுவசிக்கின்றேன்
- ஆமென்.

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே