Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப்பாடல் 3  
ஆண்டவரே மனமிரங்கும்
கிறீஸ்துவே மனமிரங்கும்
ஆண்டவரே மனமிரங்கும்



உன்னதங்களிலே இறைவனுக்கு
மாட்சிமை உண்டாகுக
உலகினிலே நல்மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக

புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப்படுத்துகின்றோம் யாம்

உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே

ஆற்றல் அனைத்தும் கொண்டு
இலங்கும் தேவ தந்தை இறைவனே
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே

ஆண்டவராம் எம் இறைவனே
இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாகச்
செனித்த இறைவன் மகனே நீர்

உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே
ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ.....ஆமென்.




தூயவர் தூயவர் தூயவர்
மூவுலகிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவுனும்
மாட்சிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசான்னா (2)

ஆண்டவர் திருப்பெயரால் வருகிறவர்
ஆசீர் நிரம்பப் பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா (2)




உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வைத்தருளும். எம் மேல் இரக்கம் வைத்தருளும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எமக்கு அமைதி தந்தருளும்.


 

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே