திருப்பலிப் பாடல்கள் | 1624 -விண்ணகத்தில் வாழும் எங்கள் |
விண்ணகத்தில் வாழும் எங்கள் அன்புத் தந்தையே உமது நாமம் வாழ்கவே உமது அரசு வருகவே உமது சித்தம் விண்ணவர்போல் மண்ணில் ஆகுக வாழ்க வாழ்க வாழ்கவே வானகத் தந்தை வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே அவர் ஆட்சி என்றும் வாழ்கவே எமது உணவை அனுதினமும் எமக்குத் தாருமே எமக்குத் தீமை செய்தவரை யாம் பொறுப்பது போலவே எமது பாவம் யாவற்றையும் பொறுத்தருள்வீரே வாழ்க வாழ்க வாழ்கவே வானகத் தந்தை வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே அவர் ஆட்சி என்றும் வாழ்கவே எம்மைத் தொடர்ந்து வாட்டிடும் சோதனைகளை கண்டுணரச் செய்யுமே வெல்ல வலிமை தாருமே தீங்கனைத்திலிருந்து எம்மைக் காத்தருள்வீரே வாழ்க வாழ்க வாழ்கவே வானகத் தந்தை வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே அவர் ஆட்சி என்றும் வாழ்கவே |