திருப்பலிப் பாடல்கள் | 1622 -வானிலே அரசு கொண்ட |
வானிலே அரசு கொண்ட வடிவுடை எங்கள் தந்தாய் மண்ணிலே உமது நாமம் மாபெரும் புனிதம் போற்றி (2) விண்ணுடைய உமது ஆட்சி விரைந்திங்கு வருதல் வேண்டும் அண்ணலே உமது உள்ளம் அவ்விடம் இயங்கும் வண்ணம் மண்ணிலும் இயங்க வேண்டும் மைந்தர்கள் இறைஞ்சுகின்றோம் உலகினில் எமக்கு நாளும் உணவினை அளித்தல் வேண்டும் இலகு எம் பகைவர் தம்மை எம்முள்ளம் பொறுத்தது போல நலமிலாக் குறையாம் செய்தால் நாடி நீர் பொறுத்தல் வேண்டும் சோதனை துன்பம் எம்மை தொடராது காவல் கொள்வீர் துயர் தரும் அலகை மாக்கள் தொடர்ந்தெம்மை வருத்தும் போது அவரிடமிருந்து எம்மை ஆண்டவா காப்பாய் போற்றி |