Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப் பாடல்கள் 1621 -வானமும் பூமியும் படைத்தவராம்  
வானமும் பூமியும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்
தந்தை சுதன் தூய ஆவியுமாய்
தன்னில் உறவுடன் வாழ்கின்றார்

பரிசுத்த ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்
மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்
கல்லறை ஒன்றில் அடக்கப்படடார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
மரணத்தின் மீதே வெற்றி கொண்டார்

பரலோகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்
உலகம் முடியும் காலத்தில்
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்

பரிசுத்த ஆவியை நம்புகிறோம்
பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்
புனிதர்கள் உறவை நம்புகிறோம்
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப்பொருளாய் நம்புகிறோம்
ஆ..ஆஆஆ.ஆஆமென்.
 

விண்ணகத் தந்தையே உமது நாமம்
அர்ச்சிக்கப்படுவதாக