Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப் பாடல்கள் 1617 -உன்னதத்தில் வீற்றிருக்கும்  
உன்னதத்தில் வீற்றிருக்கும் - எங்கள்
அன்புத்தந்தையே உன்
தூய நாமம் போற்றப்படுவதாக
உமது அரசு எங்கும் அமைவதாக

விண்ணுலகில் உமது சித்தம்
செய்யப்படுவது போல் - இப்
பூவுலகிலும் செய்யப்படுவதாக
நீர் எமக்கு அருளுகின்ற
அனுதின உணவை
இன்றும் எமக்கு அளித்தருள்வீராக - 2

எமக்குத் தீமை செய்தவரை
நாம் பொறுப்பது போல எம்
பாவங்களைப் பொறுத்தருள்வீராக
சோதனையில் எங்களை
விழவிடாது தந்தையே
தீமை நீக்கிக் காத்தருள்வீராக - 2
 

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே