உம் மேலாம் மாட்சிமைக்காய்
நன்றி கூறுகின்றோம்
ஆண்டவராம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே
ஆண்டவராம் இறைவனே
இறைவனின் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாகச்
செனித்த இறை மகனே
உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
தந்தை வலம் இருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசுவே நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே. ஆ........மென்.. ஆ........மென்..
அமைதி தரும் எங்களிறைவா நாட்டிற்காக ஜெபிக்கின்றோம்
எங்கள் தலைவர்கள் சுயநலமின்றி உழைக்கவும்
நேர்மை உண்மையோடு நடக்கவும்
அமைதி நீதி எங்கும் நிறையும் நாடாக
வரம் தாரும் வரம் தாரும்
கருணையுள்ளம் கொண்ட இறைவா பங்கிற்காக ஜெபிக்கின்றோம்
முதியோர் பெரியோர் இளையோர் இல்லாதவர்கள்
ஆர்வம் கொண்டுழைக்கும் பணியாளர்கள்
உடல் உள்ள சுகத்தோடு என்றும் வாழ்ந்திட
வரம் தாரும் வரம் தாரும்