திருப்பலிப் பாடல்கள் | - |
ஆண்டவரே இரக்கமாயிரும் (2) கிறீஸ்துவே இரக்கமாயிரும் (2) ஆண்டவரே இரக்கமாயிரும் (2) உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்தும்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டிலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர் உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர் உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர் தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர் ஏனெனில் இயேசு கிறிஸ்தவே நீர் ஒருவரே தூயவர் நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் மாட்சியில் உள்ளவர் நீரே. ஆ........மென்.. ஆ........மென்.. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) இறைவா உம்மை யாம் போற்றிப் புகழ்கின்றோம் ஆண்டவர் நீர் என்று ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் வாழும் தந்தாய் உம்மை எல்லா உலகும் பணிகின்றது விண்ணில் மண்ணில் வாழும் எல்லா தூதரணிகளுடன் ஆற்றல் மிகுந்தோர் உயிர்நிறைந்தோரும் ஞானம் மிகுந்தோரும் தூயவர் தூயவர் துயவராம் மூவுலகின் தேவன் தாவியே வழியுது விண்மண் மீது உம் பெருமையின் மாட்சி இன்னிசை ஒன்றே இடையறா தெழுப்பி இறைவா உம் புகழ் பாடுவரே எல்லையில் மாட்சியின் தந்தை நீரென்று சொல்லுவர் புகழ்மிகு திருத்தூதர் போற்றுவர் வியத்தகு இறைவாக்கினர்கள் வாழ்த்துவர் வெண்ணாடை மறைசாட்சிகள் என்றுமே விளங்கிடும் தூய திருச்சபை என்றும் நின் மாட்சியை வெளிப்படுத்தும் உமதுண்மை ஏக மகனான கிறிஸ்துவையும் தேற்றிடும் தூய ஆவியையும் ஆராதிக்கின்றோம் கிறிஸ்துவே நீரே மாட்சிமை மிக்க வேந்தன் நீரே தந்தையின் என்றும் வாழும் இணையில்லா மைந்தன் மனிதரை மீட்க கன்னியின் உதரத்தில் மனிதனாக நீர் தயங்கவில்லை மரணத்தின் கொடுக்கை வென்றே நீரே விண்ணரசை நம்பிக்கை கொள்வோர்க்கு திறந்துவைத்தீர் தந்தையின் மாட்சியில் இறைவனின் வலப்பக்கம் வீற்றிருப்பவர் நீரே எங்களைத் தீர்ப்பிட வருபவர் நீரென நம்புகின்றோம் ஆகவே விலையிலாக் குருதியை கொண்டு மீட்ட உம் அடியார்க்கு துணைபுரியும் முடியா மாட்சியில் புனிதர்களோடு என்றுமே இவர்களை இணைத்தருளும் ஆண்டவரே உம் மக்களைக் காத்து உமதுடைமையை ஆசீர்வதியும் அவர்களை ஆட்சிசெய்தென்றென்றும் பெருங்குலமாக மேன்மைப்படுத்திட வேண்டுகின்றோம் ஒவ்வொரு நாளும் உம்மைப் புகழ்கின்றோம் என்றென்றும் உமது புகழைப் பாடுகின்றோம் இன்று நாங்கள் பாவத்தை விட்டு விலகி வாழத் துணைபுரியும் எங்கள் மீது இரக்கமாயிரும் இரக்கமாயிரும் ஆண்டவரே ஆண்டவரே உம் கருணையின் பார்வை எம்மீது நிலைக்கட்டும் ஏனெனில் உம்மையே நம்பினோம் உம்மையே நம்பினோம் ஆண்டவரே என்றுமே கலங்கிட மாட்டோம் தூயவர்...... தூயவர்....... தூயவர் ....... மூவுலகிறைவன் ஆண்டவர் மூவுலகிறைவன் ஆண்டவர் வானமும் வைய்யமும் யாவுனும் மாட்சியால் நிறைந்துள்ளன ஓசான்னா ஓசான்னா உன்னதங்களிலே ஓசான்னா (2) ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி நிரம்பப் பெற்றவரே ஓசான்னா ஓசான்னா உன்னதங்களிலே ஓசான்னா (2) விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும் எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் உலகின் பாவம் போக்குகின்ற இறைவனின் செம்மறியே! எம்மேல் இரக்கம் வையும் உலகின் பாவம் போக்குகின்ற இறைவனின் செம்மறியே! எம்மேல் இரக்கம் வையும் உலகின் பாவம் போக்குகின்ற இறைவனின் செம்மறியே! எமக்கு அமைதி தந்தருளும் தந்தருளும் தந்தருளும். |