Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப் பாடல் 10  
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)
கிறீஸ்துவே கிறீஸ்துவே இரக்கமாயிரும் (2)
ஆண்டவரே இரக்கமாயிரும் (2) இரக்கமாயிரும்


உன்னதங்களிலே இறைவனுக்கே
மாட்சிமை உண்டாகுக
உலகினிலே நல்மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக

புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்தும்மை
மாட்சிப்படுத்துகின்றோம் யாம்

உமது மேலாம் மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே

ஆற்றல் அனைத்தும் கொண்டிலங்கும்
தேவ தந்தை இறைவனே
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே

ஆண்டவராகிய இறைவனே
இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாகச்
செனித்த இறைவன் மகனே நீர்

உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
தூய ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே. ஆ........மென்.. ஆ........மென்..ஆ........மென்.

அல்லேலூயாஆகா அல்லேலூயா அல்லேலூயா....
அல்லேலூயாஆகா அல்லேலூயா அல்லேலூயா....
அல்லேலூயா அல்லேலூயா
மாபெரும் நற்செய்தி ஆண்டவராகிய மெசியா பிறந்துள்ளார்
அல்லேலூயாஆகா அல்லேலூயா அல்லேலூயா....
அல்லேலூயாஆகா அல்லேலூயா அல்லேலூயா....
அல்லேலூயா அல்லேலூயா

தூயவர்...... தூயவர்....... தூயவர் .......
வான் படைகளின் ஆண்டவர்
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசான்னா உன்னதங்களிலே ஓசான்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்
உன்னதங்களிலே ஓசான்னா உன்னதங்களிலே ஓசான்னா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா ஓசான்னா


உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எம்மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எம்மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எமக்கு அமைதி தந்தருளும் எமக்கு அமைதி தந்தருளும்

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே