குருத்துவப் பாடல்கள் | ஒருவெண் கொற்ற |
ஒருவெண் கொற்ற குடை நிழலில் இவ்வ உலகாழ் வேந்தன் வாழியவே! பொருதும் படையும் போருமின்றி இறைவன் அன்பின் நிறைவாலே மக்கள் மனமாழ் வேந்தன் வாழியவே ஒருவெண் கொற்ற குடை நிழலில் இவ் உலகாழ் வேந்தன் வாழியவே! பரமன் பிரதி நிதியாமே - எங்கள் பாப்பரசரின் புகழ் இதுவாமே ஒடுக்கமும் உண்மையும் உரைப்பாரே - அதில் வழுவாவரம் அவர் துணையாமே வெண்பொன் நிறம் அவர் கொடியாமே ஒளி மின்னலின் தூய இவ்வரசாமே மும்மகுடம் அவர் முடியாமே - வளர் மூவுலகாள் அதிபதியாமே |