குருத்துவப் பாடல்கள் | அணையாத சுடராய் உனக்காக எரிய |
அணையாத சுடராய் உனக்காக எரிய அழியாத அன்போடு வந்தேன் புதுப் பலியாக நானாகி பணி வாழ்வு புரிய அகலாக என் நெஞ்சம் தந்தேன் அழகான இதயம் நீ தந்தது - அதில் வழிந்தோடும் மொழியும் உன் அன்பானது ஆ...ஆ..ஆ..ஆ அழியா உன் அன்பே என் வாழ்வாகிட - இனி எனதான எல்லாமே உன் சொந்தமே எளிதான உலகம் நீ படைத்தது - அதில் அசைந்தாடும் தென்றல் உன் புகழ் பாடுது ஆ...ஆ..ஆ..ஆ தேவா உன் நிலையன்பு எனில் தந்திட இனி திசையெங்கும் உன் பாடல் நானாகுவேன் |