குருத்துவப் பாடல்கள் | நீ என் மகனல்லவா |
யாரை நான் அனுப்புவேன் என் மக்களின் விடுதலைக்காய் இதோ நான் இருக்கின்றேன் என்னை அனுப்பிவிடும் எகிப்தில் நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளைக் கண்ணுற்றோம் வேலை வாங்கும் மேற்பார்வையாளரின் கொடுமையின் பொருட்டு அவர்கள் இடுகிற கூக்குரலையும் கேள்வியுற்றோம் அவர்களை எகிப்தியரின் கைகளினின்று விடுவிக்க இறங்கி வந்தோம் நீ வா அதற்காக உன்னை அனுப்பினோம் நாமே உன்னோடிருப்போம் என்னோடு நீயிருக்க எனக்குக் குறையில்லை அறியாத மந்தை தெரியாத இடங்கள் என்றும் தயக்கமில்லை இம்மக்கட்காய் பணியாற்ற என்னையே தருகின்றேன் 2. நீ போய் இந்த மக்களுக்கு கேட்டும் கேட்டும் உணர மாட்டீர்கள் பார்த்தும் பார்த்தும் நீங்கள் அறியீர்கள் என்று சொல்வாயாக இதோ நம் நெருப்புத்தழல் உன் உதடுகளைத் தொட்டது நீ வா அவர்களிடம் உன்னை அனுப்பினோம் உன்னை இறைவாக்கினராய் ஏற்படுத்தினோம் என்னை நீ அழைத்ததால் எனக்குப் பயமில்லை பாவங்கள் உண்டு பலவீனமுண்டு என்றும் தயக்கமில்லை உன் துணையில் பணியாற்ற என்னையே தருகின்றேன் |