குருத்துவப் பாடல்கள் | உன் அன்பில் நிலைத்திருக்க |
உன் அன்பில் நிலைத்திருக்க உன் திருவுளம் நிறைவேற்ற உன் திருப்பணியை நாளும் செய்ய நீர் என்னை தேர்ந்தெடுத்தீர் நூறாயிரம் மனிதர்களில் கண்டுகொண்டீர் என்னை நூறாயிரம் மனிதர்களில் அருட் பொழிந்தீர் என்னை கலங்கிடாதே. திகைத்திடாதே உன்னை நடத்திடுவேன் பயந்திடாதே தயங்கிடாதே உன்னை காத்திடுவேன் தாயின் கருவில் உதிக்கும் முன்னே என்னை உமக்காய் தெரிந்துகொண்டீர் எளிய மனிதனாய் வாழ்ந்த என்னை அழைப்பை தந்து உயர்த்தி விட்டீர் களி மண்ணாக இருந்த என்னை உமது சாயலாய் மாற்றி விட்டீர் உடைந்த பாத்திரம் ஆன என்னை உமது கருவியால் மாற்றிவிட்டீர் இரக்கத்தின் வழியினிலே உமது ஆட்சியை பகிர்ந்திடவே ஏற்ற தாழ்வுகள் எதுவும் இல்லாமல் உமது நண்பனாய் உடைத்திடுவேன். கோதுமை மணியெனவே மடிந்து நானும் பலன் தருவேன் உண்மை உள்ள ஊழியனாக உமக்கு சான்று பகிர்ந்திடுவேன். |