குருத்துவப் பாடல்கள் | நற்செய்தியின் தூதுவனாய் |
ஆண்டவரே உமது ஆவியை என்மேல் ஏனெனில் நீரே என்னை அருட்பொழிவு செய்தீர் நற்செய்தியின் தூதுவனாய் என்னை அழைத்தவரே உமக்கு நன்றிகள் பாடுகிறேன் என் தலைவரே என் யேசுவே சரணம் சரணமையா சரணம் சரணமையா நற்செய்தியின் தூதுவனாய் என்னை அழைத்த தெய்வமே உம் மைந்தராய் எனைத் பெற்றெடுத்தீர் உந்தன் பணிகள் தொடரவே திருமலை மீது சீயோனின் அரசரே - என்னை திருநிலை பொழிந்தே உயர்வாக்கினீர் உம் மக்களின் துன்பங்கள் கண்டீர் உடன் மீட்டிட தயை புரிவீர் எனையே வா இறைவா உந்தன் புகழிசைத்தேன் இறைவா உந்தன் மூலியமாய் என்னைத் தேர்ந்துகொண்டீர் என் இறைவா உமக்கே செவிகொடுத்தேன் திருகருப்பையினில் என் உயிர் படைத்தீர் என் இறைவா எனில் நீ வாழ்கின்றீர் என் சீடனே நீ அஞ்சாதே உன் தோள்களில் நான் வலிமை தந்தேன் நீ எனக்கு உரியவன் என் சொந்தமானவன் நீ எனக்கு உரியவன் சொந்தமானவன் என்றுரைத்த என் இயேசுவே சரணம் சரணம் தேவா எனையே தா இறைவா - உந்தன் புகழிசைத்தேன் இறைவா நீர் ஆணையிட்டு அன்று உரைப்பதனை தினம் அறிவிக்க என்னை அனுப்பி வைத்தீர் நீர் விரும்புவதை எனக்கேதுமென்று பூவுலகினை வரமாய் பரிசளித்தீர் உன் தோள் வலிமை என்னில் செயல்படுமே உன் திருக்கரங்கள் வழி காட்டிடுதே நீ எனக்கு உரியவன் என் சொந்தமானவன் நீ எனக்கு உரியவன் சொந்தமானவன் என்றுரைத்த என் இயேசுவே சரணம் சரணம் தேவா |