Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் நீ என் மகனல்லவா  

நானே உன் கடவுள்
முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன்
என் மக்களின் துன்பங்கள் கண்டேன்
அவர் மனம் படும் வேதனை உணர்ந்தேன்
அவர் அழுகுரல் நான் கேட்டேன்
நாடும் நலமும் வாழ்வும் வளமும்
வழங்கிட மனம் உவந்தேன்
யாரை நான் அனுப்புவேன்

எனை அனுப்பும் எனை அனுப்பும்
இதோ நான் இருக்கிறேன்
உலகம் அறியா எளியவன்
வாய்மொழி பேசா சிறியவன்
உம் துணை இருந்தால் என்னுடன் நடந்தால்
துணிவுடன் நான் செல்வேன்
எனை அனுப்பும் எனை அனுப்பும்
இதோ நான் இருக்கிறேன்



நானே உன் கடவுள்
வான்படைகளின் இறைவனாய் நானே இருக்கிறேன்
என் பெயரால் செல்பவர் யாரோ
என் செய்தியை சொல்பவர் எவரோ
என் பணியினைச் செய்வாரோ
அன்பும் அறமும் நீதியும் நேர்மையும் நிலைநிறுத்திடுவாரோ


 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை